ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி  காரைக்குடியில்  உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாலிடெக்னிக் மாணவர்கள்

மாணவர்கள் திடீரென கல்லூரிக்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் கொரானா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது.கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில்,தற்போது நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில்,இந்த ஆண்டு மட்டும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், இதே கோரிக்கையை வலியுறுத்தி,வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் திடீரென கல்லூரிக்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்