சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல்: மதுக்கடைகளை மூட உத்தரவு
உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் - 2022 நடைபெறும் பகுதிகளில், உள்ள மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள்-2022 வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை சுற்றி 5 கி.மீ சுற்றளவில் உள்ள இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானக் (சில்லரை விற்பனை) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் , உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை 07.07.2022 காலை 10.00 மணி முதல் 09.07.2022 (வாக்குப்பதிவு நடைபெறும் நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் (வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்) 12.07.2022 ஆகிய தினங்களில்; மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள்-2022 வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை சுற்றி 5 கி.மீ சுற்றளவில் உள்ள பட்டியலில் கண்ட இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான (சில்லரை விற்பனை) கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம், 07.07.2022 காலை 10.00 மணி முதல் 09.07.2022 (வாக்குப்பதிவு நடைபெறும் நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் (வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்) 12.07.2022 (அன்று முழுவதும்) ஆகிய தினங்களில் மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu