/* */

வட்டாட்சியர் அலுவலகத்தில் கவுன்டர் பற்றாக்குறை: சான்றிதழ்கள் பெற மக்கள் அவதி

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் சான்றிதழ்கள் பெற போதிய கவுண்டர் வசதி இல்லாததால் பயனாளிகள் அவதி.

HIGHLIGHTS

வட்டாட்சியர் அலுவலகத்தில் கவுன்டர் பற்றாக்குறை: சான்றிதழ்கள் பெற மக்கள் அவதி
X

காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் சான்றிதழ்கள் பெற போதிய கவுண்டர் வசதி இல்லாததால் பயனாளிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா நகல், உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற வந்து செல்கின்றனர். ஆனால், பயனாளிகளின் வருகைக்கு ஏற்றவாறு சான்றிதழ் வழங்க போதிய கவுண்டர்கள், கணினி ஆபரேட்டர்கள் இல்லாததால், பயனாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சான்றிதழை பெறும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் போதிய வசதிகள் இல்லாததால் உட்காரக் கூட இடமின்றி அல்லல்பட்டு வரும் நிலையில், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் பயனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரனிடம் கேட்டபோது, பயனாளிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 4 Aug 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...