காரைக்குடி: இருசக்கர வாகனம் திருடிய 2 பேரிடமிருந்து 15 வாகனங்கள் பறிமுதல்

காரைக்குடி: இருசக்கர வாகனம்  திருடிய 2  பேரிடமிருந்து  15 வாகனங்கள் பறிமுதல்
X

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்குடி பகுதியில் திருடுபோன இரு சக்கர வாகனங்கள்

திருடிய இரு சக்கர வாகனங்களை தெரிந்தவர்களிடம் 5 ஆயிரம் 10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்து உல்லாசமாக வாழ்ந்தது தெரிய வந்தது

இருசக்கர வாகனத்தை திருடி அடகு வைத்து உல்லாசமாக வாழ்ந்த 2 திருடர்களை காரைக்குடி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி , குன்றக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு கடை தொழிற்சாலை பூங்கா என எங்கு இரு சக்கரவாகனங்களை யார் நிறுத்தி சென்றாலும் அந்த வாகனங்கள் திருடு போனதாக 40க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையில், காரைக்குடி வடக்கு ,தெற்கு , குன்றக்குடி ஆய்வாளர்கள் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

நேற்று முன்தினர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி காவல்துறை விசாரணை செய்த பொழுது அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண் போலியானது என தெரியவந்ததால் அந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது

அவர்களிடம் தீவிர விசாரணை செய்த பொழுது அவர்கள், காரைக்குடி இடையர் தெருவை சேர்ந்த பாலமுருகன், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என தெரியவந்தது. அவர்கள் இரு சக்கர வாகனங்களை திருடி, அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் 5 ஆயிரம் 10 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனங்களை அடமானம் வைத்து உல்லாசமாக வாழ்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரிடம் இருந்து காவல் துறையினர் 15 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த இருவரும் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது அதனால் காவல் துறையினர் திருடிய வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story