சிவகங்கை; தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர அழைப்பு!
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ( கோப்பு படம்)
ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து ”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பினை தொடங்கி உள்ளது.
”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள் வருகின்ற நவம்பர் மாதம் 4ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. மேலும், ”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான கட்டணமாக ரூ.80,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / 10ம் / 12ம் வகுப்பு படித்திருப்பதுடன், தொடர்புடைய பயிற்சியில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ”தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” ஓராண்டு சான்றிதழ் படிப்பில் https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரை 97905 35243, 86681 01638, 86681 07552 என்ற அலைபேசி எண்களின் வாயிலாகவோ அல்லது academy@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவேலா தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu