காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை- பரபரப்பு

காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை- பரபரப்பு
X

திருடு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர்.

காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காரைக்குடி அருகே ஆறவயலில் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. மதுரையில் வசித்து வரும் இவர், பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும், அவரது பங்காளிகளுக்குமான பூர்வீக வீடு உள்ள ஆறாவயல் கிராமத்தில் உள்ளது.

இன்று வழக்கம்போல் ராமசாமி ஆறாவயல் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

அதிர்ச்சி அடைந்த ராமசாமி, ஆறாவயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். திருடு நடந்த வீட்டிற்கு விரைந்து வந்த தேவகோட்டை டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ராம்போ வரவழைக்கப்படது.

இது குறித்து, காவல்துறையினர் முதல்கட்டவிசாரணை நடந்து வருகிறது. ராமசாமியின் மற்றும் பங்காளிகள் அனைவருக்கும் பொதுவான வீடு என்பதால், இந்த வீட்டில் தங்க, வெள்ளி, வைர நகைகளை இங்குதான் வைத்துச் சென்றுள்ளனர் அவர்கள் அனைவருமே வந்த பிறகே, திருடு போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும். கோடிக்கணக்கிலான மதிப்பில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வீட்டின் எதிரில்தான், உதயநிதி ஸ்டாலின் மனைவி கீர்த்திகா வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!