சிவகங்கை மாவட்டத்தில் மே.20 -ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மே.20 -ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும்நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.வருகின்ற 20.05.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து,அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
ai as the future