சிவகங்கை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உழவர் இதழ் வெளியீடு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உழவர் இதழினை வெளியிட்டு, 16 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் பண்ணைக்கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், நெல் பயிருக்கான இழப்பீடு மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், இயந்திரம் மூலம் நடவு செய்வதற்கு மானியம் வழங்கக் கோருதல், கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரக் கோருதல், வறட்சி நிவாரணம் வழங்கக் கோருதல், பண்ணைக்குட்டை அமைத்துத் தரக் கோருதல், குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தரக் கோருதல், பருத்தியை அரசின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல்,
புதிய கால்நடை மருத்துவமனை திறக்கக் கோருதல், கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கக் கோருதல், மிளகாய் பயிருக்கான ஊக்கத்தொகை, காய்கறிகள் விதைகள் வழங்கக் கோருதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், கண்மாய் கழிவு நீர் மற்றும் செங்குத்து உறிஞ்சுக்குழி அகற்றுதல், கால்வாயை சீர்செய்தல், புதிய மேல்நிலை தொட்டி கட்டித்தர கோருதல், தார்சாலை அமைத்தல், பேவர்பிளாக் கல்சாலை மற்றும் சிமெண்ட் தொட்டி கட்டுதல், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல்,
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிசெய்தல், குடிநீர் வழங்குதல், மெட்டல் சாலை அமைத்தல், மயானச்சாலை அமைத்தல், ஆடு, மாடு கொட்டகை அமைத்தல், பழுதடைந்த மடைகளை சரிசெய்தல், பாலம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், குடிநீர் ஊரணி கால்வாய் சுத்தம் செய்தல், குளக்கால் சீர்செய்தல், தடுப்பணை அமைத்தல், இலவச வீடு வழங்கக் கோருதல், ஊரணியை மராமத்து செய்தல், சாலை வசதி, புதுகண்மாய் தூர்வாருதல், சமுதாய கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல்,
நெடுஞ்சாலைத்துறை வளாகத்தை பள்ளிக்கு வழங்குதல், டாப்செட்கோ திட்டத்தில் மானியம் வழங்குதல், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோருதல், வட்டியில்லா ஆடு, மாடு பராமரிப்பு கடன் வழங்குதல், கணினி திருத்தம் செய்தல், மானியம் விலையில் ஜே.சி.பி.இயந்திரம் வாங்க கடன் கோருதல், காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், கதிர் அறுவடை இயந்திரத்திற்கு மானியம், வைகை ஆற்றில் இருகரைகளில் உள்ள ஆக்கிரமிப்பக்களை அகற்றுதல்,
வேலிக்கருவேல் மரங்கள் அகற்றுதல், அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையம் அமைத்தல் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விவரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைப்படையில் இன்றையதினம் காரைக்குடிப் பகுதியில் முதல் முறையாக கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல் ஆகிய வட்டரங்களைச் சார்ந்த விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்;ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், நீர்வள ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கென நடப்பாண்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் 150 கண்மாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 241 கண்மாய்களில் பணிகள் மேற்கொள்வதற்கென அதற்கான முன்மொழிவுகளும் அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிகள் பெறப்பட்டவுடன் பணிகள் துவங்கப்படும்.
மேலும், அடுத்த நிதியாண்டிலும் 300 கண்மாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களையும் மேம்படுத்துவதற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வேளாண் துறையின் சார்பில், சாக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 1 பயனாளிக்கு ரூ.400 மதிப்பீட்டிலான 8 கிலோ உளுந்தினையும், 1 பயனாளிக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,534 மதிப்பீட்டிலான பண்ணைக்கருவிகள் தொகுப்பினையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.800வீதம் ரூ.1,600 மதிப்பீட்டிலான 1 எண்ணம் கொண்ட தாய்பாய்களையும், 1 பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பீட்டிலான 200 மரக்கன்றுகளையும், 1 பயனாளிக்கு ரூ.1,500 மதிப்பீட்டிலான 100 மரக்கன்றுகளையும்,
வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.800 வீதம் ரூ.1,600 மதிப்பீட்டில் மானியத்துடன் தார்பாலின்களையும், 1 பயனாளிக்கு ரூ.2,500 மதிப்பீட்டில் மானியத்துடன் நெல் விதைப்புக் கருவியினையும், 1 பயனாளிக்கு ரூ.1,600 மதிப்பீட்டில் மானியத்துடன் மின்விசைத் தெளிப்பானையும், 1 பயனாளிக்கு ரூ.1,248 மதிப்பீட்டில் மானியத்துடன் சிவப்பு பாசி ஜெல்லினையும்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.8,000 மதிப்பீட்டிலான மானியத்துடன் அங்கக வேளாண்மை இடுபொருட்களையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா 2 பயனாளிகளுக்கு தலா ரூ.160வீதம் ரூ.320 மதிப்பீட்டிலான மானியத்துடன் பழச்செடிகள் தொகுப்புக்களையும், 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத்துடன் காய்கறி விதைத்தளைகள் தொகுப்பினையும் என மொத்தம் 16 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உழவர் இதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட, அதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜூனு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu