அரசு முத்திரையுடன் போலி ஆவணம்; திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு
பைல் படம்.
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பெத்தபெருமாள் (60) தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன் உள்ளிட்ட 4 சகோதர்களுக்கு பல கோடி மதிப்பிலான பொதுவான சொத்துக்கள் உள்ளன.
சேவுகன் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், பொது சொத்துக்களை பிரிக்காமல் இருந்து வந்துள்றார்கள். சமீப காலமாக இந்த பொது சொத்துக்களை விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக பெத்தபெருமாளுக்கு தெரிய வந்தது.
இந்த சொத்துக்களை விற்பனை செய்தது தனது சித்தப்பா வீரப்பன் தான் என்பது தெரிந்தது, பொது சொத்துகளை அவர் எப்படி விற்க முடியும் என கருதிய பெத்தபெருமாள், சித்தப்பா போலியான அரசு முத்திரையுடன் வாரிசு சான்றிதழ் தயார் செய்து விற்பனை செய்ததாக தெரிய வந்தது.
இதுகுறித்து ஆறாவயல் காவல் நிலையத்தில் பெத்தபெருமாள் புகார் அளித்தார். மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் சுப்பிரமணியன் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு சான்றிதழ் பார்த்தவுடன் அவை போலி என கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார். போலியான அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழ் தயாரித்து சொத்துக்களை விற்பனை செய்ய வீரப்பனுக்கு உதவியாக இருந்த திமுகவின் தேவகோட்டை வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இராமநாதன், காளிமுத்து, ராஜா, விஸ்வநாதன், சிவா, தினேஷ் ராஜா, ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல தேவகோட்டை நகரில் போலியான கோட்டாட்சியர் ஆணை தயார் செய்து பட்டா மாறுதல் செய்ய முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை பகுதிகளில் சமீப காலமாக போலியான ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu