திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு

திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கானது: ப.சிதம்பரம் பாராட்டு
X

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம்.

திமுகவின் சமுதாயப் பார்வையும், நோக்கமும் நிதிநிலை அறிக்கையில் அழுத்தமாகப் பதிந்துள்ளதாக ப.சிதம்பரம் பாராட்டு.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு,செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது:

தமிழக அரசின் நிதி நிலைமை எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் தெளிவாக விளக்கியுள்ளார். படிப்படியாகத்தான் நிதி நிலைமையை சீரமைக்க முடியும். அதற்கான முதல் படி இந்த நிதிநிலை அறிக்கை. தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கையில், சில வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். இவாறு அவர் தெரிவித்தார்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்