காரைக்குடி அருகே பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

காரைக்குடி அருகே பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
X

வாக்காளர்களுக்கு உறுதிமொழியை பத்திரதாளில் எழுதி கொடுத்து பாஜக வேட்பாளர் நூதன பிரசாரம்

கோட்டையூர் பேரூராட்சி பாஜக வேட்பாளர் வாக்குறுதிகளை ரூ 20 பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு, போட்டோ எடுத்து கொடுத்து நூதன பிரச்சாரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல்வேறு உத்திகள் ,நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 8 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மென் பொறியாளர் பாண்டித்துரை வார்டு வாக்காளர்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்,

ரூ 20 பத்திரத்தில் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை எழுதி அதில் கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளார், மேலும் சொன்னதைச் செய்வேன் என்று கூறி வாக்கு கேட்டு நான் உங்களிடம் வந்ததற்கு சாட்சியாக உடனடியாக போட்டோவும் எடுத்து வாக்காளர் கையில் கொடுத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!