காரைக்குடி நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

காரைக்குடி நகராட்சி பகுதியில்  வளர்ச்சித் திட்டப்  பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

காரைக்குடி நகராட்சிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி

மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகள், ஊரகப்பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் நிறைவேற்றப்படும்

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தற்போது ரூ.24.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருவது மட்டுமன்றி, மாநிலம் முழுவதும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து நகராட்சிப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகள் ஆகியவைகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கென நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, பணிக ன் தரம் மற்றும் நிலை ஆகியன தொடர்பாக உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றையதினம் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதில், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட செஞ்சை, முத்துப்பட்டிணம் ஆகியப்பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளும், நமக்கு நாமே திட்டம் 2021-2022-ன் கீழ் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளில் சூடாமணி புரத்தில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகளும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டில் பருப்புஊரணி, சோமுபிள்ளை தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் கட்டுமானப் பணிகளும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகள் மற்றும் எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளையும்,

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 14 நகராட்சிப் பள்ளிகளில் 1,631 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.18.57 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டப்பணிகளும் மற்றும் மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் 4,290 எல்இடி மின்விளக்குகள் அமைத்தல் பணியும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.42.48 இலட்சம் மதிப்பீட்டில் எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணியும்,

தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் சுமார் 5.695 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்தல் பணிகளும், ரூ.06.00 கோடி மதிப்பீட்டில் 7,250 வீடுகளுக்கு பாதாளச்சாக்கடை இணைத்துக் கொடுக்கும் பணிகளும் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.01.03 கோடி மதிப்பீட்டில் செல்லம்பட்டி ஊரணி மற்றும் செக்காலை தெப்பக்குளம் ஆகியவைகளை மேம்படுத்தும் பணிகளும், சட்டமன்றத் தொகுதியின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.59.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 நியாயவிலைக்கடைகள், 5 பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் சிறுபாலம் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ.24.55 கோடி மதிப்பீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு நடைபெற்ற வரும் பணிகள் தொடர்பாக இன்றையதினம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உரிய களஆய்வுகள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர்நல அலுவலர் மரு.திவ்யா, மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!