/* */

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி
X

முன்னாள்  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். காரைக்குடியில் ப சிதம்பரம் பேட்டி அளித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறும்போது,

துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவிவிட்டது. தமிழ்நாடு அதற்கு விலக்கல்ல. பல இடங்களில் சில பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது. மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்.

இதனை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும். நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் H.ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சொல்லலாம். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்தான். பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 Jun 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...