/* */

செட்டிநாடு வேளாண் கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்

செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த 28.4.2022 அன்று முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

செட்டிநாடு வேளாண் கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சர் தொடக்கம்
X

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அருகே செட்டிநாடு வேளாண் அறிவியல் கல்லூரிக்கான கட்டுமானப்பணியொ தொடக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். உடன் எம்பி -கள் ப.சிதம்பரம், கார்த்திக்சிதம்பரம் உள்ளிட்டோர்

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளை, ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் (10.09.2023) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சித்தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதில், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

அந்த வகையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த 28.4.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரிக்கென நிர்வாக அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள், பல்துறை அரங்கம், தேர்வு கூடம் , மாணாக்கர்கள் விடுதிகள் மற்றும் வயல்வெளி ஆய்வுக் கூடங்கள், பசுமைக்குடில்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, முதல் கட்டமாக ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை 9 மாத காலத்திற்குள் தரமான முறையில் நிறைவுற்று, மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில், சிவகங்கை மருத்துவக் கல்லூரியும் கொண்டுவரப்பட்டது. மேலும், பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு பகுதி 1 பகுதி 2 பகுதி 3 என கூட்டுக் குடிநீர் கட்டங்களாக செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பகுதி 1-ன் அடிப்படையில் ரூபாய் 620 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, பகுதி 2 பகுதி 3 ஆகிய கட்டங்களுக்கான பணிகளும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்றைய நவீன கால கட்டத்தில் விவசாய பெருங்குடி மக்கள், பல்வேறு நவீன யுத்திகளுடன் பல்வேறு தொழில்நுட்பங்களை கையாள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனைக்கருத்தில் கொண்டு வேளாண் துறையை தேர்ந்தெடுத்து, பயில உள்ள மாணாக்கர்கள் படிப்பவர்களாக மட்டுமல்லாமல், விவசாயியாகவும் உருவெடுத்து , விவசாயத்தின் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய வகையிலும், அதற்கான வழிகாட்டியாகவும் சிறந்து விளங்கிட வேண்டும். மேலும் வேளாண்மை படிப்பு பயிலும் முதல்நிலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10000-வழங்கும் திட்டத்தினையும் , தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து அதன் மூலம் தற்போது வரை 700 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதுபோன்று , பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

Updated On: 10 Sep 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!