சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள்: ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 30.07.2024 அன்று சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 04 கிராமங்களுக்கும் மற்றும் தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 07 கிராமங்களுக்குமான முகாம்கள்குறிப்பிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், கடந்த 11.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 30.07.2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட, இடையமேலூர், கண்டாங்கிபட்டி, சக்கந்தி, சாளூர் ஆகிய கிராமங்களுக்கென இடையமேலூர், சேவுகபெருமாள் கோவில் மண்டபத்திலும் மற்றும் தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட ஆராவயல், எழுவன்கோட்டை, கண்டதேவி, கண்ணங்கோட்டை, சண்முகநாதபுரம், தானாவயல், தெண்ணீர்வயல் ஆகிய கிராமங்களுக்கென கண்டதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும், காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள்நலத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself