அமைச்சர் தொகுதியில் அதிமுகவை எதிர்க்க ஆளில்லை: போட்டியின்றி தேர்வு

அமைச்சர் தொகுதியில் அதிமுகவை எதிர்க்க ஆளில்லை: போட்டியின்றி தேர்வு
X

அதிமுக வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி பெற்றி பெற வாய்ப்புள்ளது.

காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி 8வது வார்டில் அதிமுக வேட்பாளர் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், அதிமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகிறது

திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளத்தூர் முதல்நிலை பேரூராட்சி வார்டு எண் 8-யில் அதிமுக சார்பில் தெய்வானை வேப்பு மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து கடைசி நாளான நேற்று வரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று அவருக்கான சான்றிதழ், வேட்புமனு பரிசீலனை முடிந்தபின்பு வழங்கப்படும். இதனால் அதிமுக வேட்பாளர் தெய்வானை போட்டியின்றி பெற்றி பெற வாய்ப்புள்ளது.

திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான கே ஆர் பெரியகருப்பன் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தையும், அதிமுகவினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்