தேவகோட்டையில் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

தேவகோட்டையில் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
X

உதயாச்சி எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி. 

தேவகோட்டையில், டைல்ஸ் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காரைக்குடிக்கு, டைல்ஸ் ஏற்றி புறப்பட்டது. லாரி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வழியாக ராமேஸ்வரம்-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று சென்று கொண்டிருக்கும் போது, உதயாச்சி எனும் இடத்தில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் குமாருக்கு காயம் ஏற்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து, தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!