சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி மே 23 ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி மே 23 ல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்

1432-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும், வருகின்ற 23.05.2023 முதல் 27.05.2023 வரை நடைபெறவுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் 23.05.2023 காலை 10.00 மணிக்கு துவங்கி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் 25.05.2023 அன்றும், தேவகோட்டை, காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய வட்டங்களில் 27.05.2023 தேதியன்றும் நிறைவடைகிறது.

மானாமதுரை வட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 23.05.2023 அன்று செய்கொளத்தூர் உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேவகோட்டை உள்வட்டத்திலும், திருப்புவனம் வட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கொந்தகை உள்வட்டத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சிங்கம்புணரி உள்வட்டதிலும்,

சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் சிவகங்கை உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் சாக்கோட்டை உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் திருக்கோஷ்டியூர் உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையில், தாயமங்கலம் உள்வட்டத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் வடிப்பக அலுவலர் தலைமையில் நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

மானாமதுரை வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் , தலைமையில் 24.05.2023 அன்று முத்தனேந்தல் உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்ணங்குடி உள்வட்டத்திலும், திருப்புவனம் வட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருப்புவனம் உள்வட்டத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வாராப்பூர் உள்வட்டதிலும்,

சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் பெரியகோட்டை உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் கல்லல் உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் இளையாத்தங்குடி உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையில், இளையான்குடி உள்வட்டத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் வடிப்பக அலுவலர் தலைமையில் காளையார்கோவில் உள்வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

மானாமதுரை வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 25.05.2023 அன்று மானாமதுரை உள்வட்டத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்டதேவி உள்வட்டத்திலும், திருப்புவனம் வட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பாச்சேத்தி உள்வட்டத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டதிலும்,

சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் ஒக்கூர் உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் பள்ளத்தூர் உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாச்சியார்புரம் உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையில் திருவுடையார்புரம் உள்வட்டத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் வடிப்பக அலுவலர் தலைமையில் மறவமங்களம் உள்வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 26.05.2023 அன்று புளியால் உள்வட்டத்திலும், சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் மதகுபட்டி உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் காரைக்குடி உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நெற்குப்பை உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையில் சாலைக்கிராமம் உள்வட்டத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் வடிப்பக அலுவலர் தலைமையில் சிலுக்கப்பட்டி உள்வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

தேவகோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 27.05.2023 அன்று சருகணி உள்வட்டத்திலும், சிவகங்கை வட்டத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் தமறாக்கி உள்வட்டத்திலும், காரைக்குடி வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் மித்ராவயல் உள்வட்டத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில திருப்பத்தூர் உள்வட்டத்திலும், இளையான்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையில் சூராணம் உள்வட்டத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் வடிப்பக அலுவலர் தலைமையில் கல்லல் உள்வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

மேற்படி பொதுமக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்படி வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படும் வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!