சிவகங்கை அருகே பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆய்வு

சிவகங்கை அருகே  பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்  ஆய்வு
X

திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கள ஆய்வு செய்தார்

திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கள ஆய்வு செய்தார்

சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து கல்வித்துறை இயக்குனர் முனைவர் க. அறிவொளி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் , திருமாஞ்சோலை, அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் முனைவர். க.அறிவொளி , மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கும் கணித செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு தலா ரூபாய் 100 வழங்கி, பாராட்டினார். மேலும், பேனா வழங்கி மாணவர்களிடையே உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்தும் விதமாக பேசி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில், உடன் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் (சட்டம்) இரா.சுவாமிநாதன் இருந்தார். திருமாஞ்சோலை அரசு பள்ளி தலைமையா சிரியர் பரிமளா தேவி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!