சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு திறப்பு
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் ,பேரூராட்சிப் பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்
காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் பேரூராட்சிப் பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் காணொளிக் காட்சி வாயிலாக காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டங்களில் மொத்தம் ரூ.23.74 கோடி மதிப்பீட்டில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட சேமிப்பு தளங்களை காணொளிக் காட்சி வாயிலாக காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட் டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , காரைக்குடி வட்டம், பள்ளத்தூர் ,பேரூராட்சிப் பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, வேளாண் சார்ந்த பல்வேறுத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காத்து வருகிறார்கள்.
மேலும், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடும் வகையில், மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன உத்தியினை கையாளுதல், விதை, நுண் ஊட்டச்சத்து, உரங்கள் ஆகியவைகளை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க்கடன் வழங்குதல், நிவாரண உதவித்தொகை வழங்குதல், வேளாண் இடுபொருட்கள் வழங்குதல், கடனுதவியுடன் கூடிய மானியத்தொகை, நெல் நடவு இயந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் வழங்குதல், கூட்டுப்பண்ணையத் திட்டம் போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.
மேலும், வேளாண்மைத்துறையின் மூலம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இயற்கை விவசாயம் மூலம் அதிக இலாபம் பெறும் பாரம்பரிய நெல் சாகுபடி முறையினை விவசாயிகள் கையாண்டு, அதன் மூலம் இலாபம் ஈட்டி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் சாகுபடியினை முறையாக சேமித்து பயன்பெறும் வகையில், தமிழக அரசால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், மேற்கூரையுடன் நவீன சேமிப்புத்தளங்கள் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு, விவசாயிகளின் நலன் காக்கின்ற வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத்தளங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
அதில், கடந்த 11.02.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக, திருப்புவனம் வட்டம், ஏனாதியில் ரூ.4.23 கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம், பள்ளத்தூரில்; ரூ.12.97 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ.10.83 கோடி மதிப்பீட்டிலும் என மேற்கண்ட 3 பகுதிகளில் மொத்தம் ரூ.28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களை மேற்கண்ட 03 வட்டங்களில் திறந்து வைத்துள்ளார்கள்.
அதன்படி, காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூரில் 22.000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 05 நெல் சேமிப்பு மேடைகளை ரூ.16.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட ஏனாதியில், 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 05 நெல் சேமிப்பு மேடைகளை ரூ.05.42 கோடி மதிப்பீட்டிலும்,
மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சிப்காட்டில், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 02 நெல் சேமிப்பு மேடைகளை ரூ.02.11 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய 03 வளாகங்களிலும் இரண்டாம் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள மொத்தம் 29,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 நெல் சேமிப்பு தளங்கள், மொத்தம் ரூ.23.74 கோடி மதிப்பீட்டில் , தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய இலாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள்; வாணிபக்கழகம்) அருண்பிரசாத், பேரூராட்சித் தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), எம்.முகமுது மீரா (புதுவயல்), உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu