சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.10.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 639 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்று தங்களது பிரச்சினைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!