சிவகங்கை மாவட்டத்தில் ஆக 15 ல் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்
சுதந்திர தினத்தன்று (15.08.2023) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சுதந்திர தினமான (15.08.2023) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2023 சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணியளவில் அரசாணை (நிலை) எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள்:25.09.2006-ல் குறிப்பிட்டுள்ளவாறு வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2023 சுதந்திர தினத்தன்று காலை 11. மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு அவ்வூராட்சியில், சுதந்திர தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகித்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,
அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெ டுப்பு உரிமைகள் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்னை மற்றும் பண்ணை சாரா ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப் படவுள்ளது.
எனவே ,15.08.2023 சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu