சிவகங்கை அருகே சுதந்திர போராட்ட வீரருக்கு அரசு சார்பில் மரியாதை

வாளுக்கு வேலி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்” பிறந்த நாள் அரசு விழாவில், அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் “வாளுக்கு வேலி அம்பலம்” பிறந்த நாள் அரசு விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம். கத்தப்பட்டு கிராமத்தில், அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் , மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் முன்னிலையில், அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், முதல்வர்களுக்கெல்லாம் தலைசிறந்த முதல்வராக திகழ்ந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , வரலாற்று சிறப்பு மிக்கவர்களின் புகழை வெளிக் கொணருகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை தமிழக அரசின் சார்பில் மேற்கொண்டு வருகிறார்.
வெள்ளையனே வெளியேறு என்று முதல் குரல் கொடுத்த பெருமை சிவகங்கை மண்ணைச் சார்ந்ததாகும். வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை மாவட்டத்தில், வீரமங்கை வேலுநாச்சியார் , மருதுசகோதரர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்த இப்பூமியில், சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களை போற்றிடும் வகையிலும், அவர்களின் வாரிசுதாரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அனைவரது பெரும் முயற்சியாலும், வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளை, அரசு விழா கொண்டாடிட அரசால் உத்தரவிடப்பட்டு, இந்தாண்டு முதல் ஜூன் 10-ஆம் தேதியன்று ஒவ்வொரு வருடமும் அரசு விழா கொண்டாடப்படவுள்ளது.
முத்தமிழறிஞர் கருணாநிதி, வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில், தென்பாண்டி சிங்கம் என்ற நூலினையும் எழுதி, அன்னார் அவர்களின் புகழை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அவ்வழியில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், வரலாற்று சிறப்பு மிக்கவர்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினர் முன்மாதிரியாக அவர்களை எடுத்துக் கொள்கின்ற வகையிலும், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , ஆட்சி பொறுப்பேற்றவுடன் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மட்டுமன்றி, அவர்கள் சொல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், வீரம், தியாகம் ஆகியவைகளில் சிறந்து விளங்கிய வீரம் விளைந்த சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிற்நத நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து, சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், அரசின் சார்பில் அன்னார் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைப்பதற்கும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,நாம் இன்றையதினம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு காரணமாக உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சர் , சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதனடிப்படையில், 200 ஆண்டுகளுக்கு முன்னதாக, நடந்துள்ள உண்மைச் சம்பவத்தை வெளிக்கொணருகின்ற வகையில், சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பையும், தியாகத்தையும் முழுவதுமாக அளித்த சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் புகழை உலகிற்கு பறைசாற்றுகின்ற வகையிலும், அதற்கு மெருக்கூட்டும் பொருட்டும், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், தன் பொன்மொழிகளால் வரலாற்று சிறப்புக்களை நூல்களாக பொறித்துள்ளார்.
அன்றைக்கு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் விதைத்த விதையின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் , வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் புகழிற்கு வலுச்சேர்க்கின்ற வகையில், அன்னாரது பிறந்த நாளினை அரசுவிழாவாக கொண்டாடிட உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கான பெரும் முயற்சியில், பலரின் பங்களிப்புடன் இணைந்து, நானும் பங்கு பெற்று, அதன் முழுப்பயனையும் இன்றையதினம் அடைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இதற்கான சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், செய்தித்துறை அமைச்சர் , சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், வழக்கறிஞர் சிவ.கலைமணி அம்பலம், வாரிசுதாரர்கள் கே.செல்வராஜ், கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu