சிவகங்கையில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து பார்வையிட்டார்
சிவகங்கை: மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில், எல்லோக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அத்திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும், பொதுமக்கள் எளிதில் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சிறப்பான புகைப்படக்கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு, இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றையதினம் பல்வேறு துறைகளின் சார்பில், அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சிகளுக்கு, வருகை தரும் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியினை, பார்த்து பயன்பெறும் வகையில், இக்கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அதன் பயன்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக, பல்வேறு புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
சிவகங்கை மாவட்ட மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ம.ரா.கண்ணகி, திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத்துரை (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்றத துணைத்தலைவர்கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பா.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu