சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் தின போட்டிக்கான கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"எனது வாக்கு எனது எதிர்காலம். ஒரு வாக்கின் சக்தி" என்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்தப்போட்டிகள் நடைபெற உள்ளன. பாட்டுப்போட்டி, வீடியோ தயாரித்தல்போட்டி, போஸ்டர் வடிவமைத்தல் போட்டி, ஸ்லோகள் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி ஆகிய இனங்களில் (1) கல்வி சார்ந்த பள்ளி ,கல்லூரி ,பல்கலைக்கழக மாணவர்கள் (2) வீடியோ தொழில் போஸ்டர் வடிவமைத்தல் பாடுதல் போன்ற தொழில்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள் (3) இனம் 2-ல் "உள்ள தொழில்களின் மூலம கலையைப் பயில்பவர்கள் என மூன்றுவிதமானப் பிரிவுகளில் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும், தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர், வங்கி, தபால் நிலையங்கள், ரயில்வே மற்றும் அனைத்துதுறைகளில் பணி புரிபவர்களும், பொதுமக்கள் அனைவரும் வயது வரம்பின்றி இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேற்சொன்ன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான பரிசுகள் மற்றும் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக பாட்டுப் போட்டிக்கு ரூ.2,00,000, வீடியோ தயாரித்தல் போட்டிக்கு ரூ.1,00,000,
மற்றும் போஸ்டர் வடிவமைத்தல் போட்டிக்கு ரூ.50,000, வரை ரொக்கத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
போட்டிகளில் பங்கெடுக்க விரும்புவோர் என்ற இணையதளத்தில் விபரமாக விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு போட்டியாளர்கள் தயாரித்த விபரங்களை முகவரிக்கு, 31.03.2022-க்குள் சமர்ப்பிக்கலாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu