சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆய்வு அலுவலர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆய்வு அலுவலர் ஆய்வு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா தலைமையில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, 

அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா தலைமையில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, இன்றைய தினம் களஆய்வுகள் மேற்கொண்டு, அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், களஆய்வுகள் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் தெரிவிக்கையில்,

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் தொடர்பாகவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் மேற்கொள்ளப்பட்டு, பணிகளின் நிலை குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் ஆகியன குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளும் பொருட்டு, இக்கூட்டமானது நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு துறைகளின் சார்பில், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கலாம். இன்றைய தினம் பல்வேறு துறைகளின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளையதினமும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன், தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இக்கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை ஆகியன குறித்து, புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர்.

முன்னதாக, சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் வட்டார பகுதியான செட்டிக்குறிச்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அம்மையத்தில் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்தும், மேலும் எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதியான கே.புதுப்பட்டி – ஆர்.பாலக்குறிச்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்ரூ.97.29 இலட்சம் மதிப்பீட்டில்,2.15 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாகவும்,

அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் ஆயுஷ் மருத்துவம் மூலம் மாவட்ட சித்த மருத்துவர் வாயிலாக இரத்தசோகை கண்டறியப்பட்ட பள்ளி மாணவஃமாணவிகளுக்கு மருந்துகள் வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கி வைத்து, மாணவியர்களுக்கு ரத்த சோகையினை கட்டுப்படுத்துவதற்கான சித்த மருந்துகளை வழங்கியும், அப்பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருதாண்டி ஊரணி மேம்பாடு பணிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.

மேலும், ஆய்வு கூட்டம் நிறைவிற்கு பின்னர் மானாமதுரை மற்றும் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்தும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.இதனைதொடர்ந்து, நாளைய தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளார்கள்.இந்நிகழ்ச்சியில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....