சிவகங்கையில் ஊராட்சித் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

சிவகங்கையில் ஊராட்சித் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
X

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில், உள்ள கிராம ஊராட்சிகளின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தென்மேற்கு பருவமழை, சீமைகருவேலம் அகற்றம்,அடிப்படை வசதி மற்றும் மின்கட்டணம், குடிநீர் கட்டணம் நிலுவை செலுத்துதல், பொது திறவிட பகுதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல், சிறந்த அருமை கொண்ட ஊராட்சி, பெண்கள் நேய ஊராட்சி, சுகாதாரம் மற்றும் பசுமை ஊராட்சி, குழந்தைகள் நேய ஊராட்சி போன்ற 9 கருப்பொருள் மற்றும் இலக்கை அடைவது ஆகியன குறித்து (01.08.2023) முதல் கட்டமாக சிவகங்கை , மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 225 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மீதம் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு இரண்டாம் கட்டமாக விரைவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்