சிவகங்கை மாவட்டத்தில், நிறைவடைந்த திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!

சிவகங்கை மாவட்டத்தில், நிறைவடைந்த திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!
X

சிவகங்கை அருகே கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடையை ,திறந்து வைத்தார், அமைச்சர் பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டத்தில், நிறைவடைந்த திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், அங்கன்வாடி மையம் கட்டிடம், கலையரங்கம், நியாய விலை கடைகள் ஆகியவைகளை திறந்து வைத்து தெரிவிக்கையில்:

தலைவர் கலைஞர் கருணாநிதி வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்து துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் தமிழக முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் உட்பட பல தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த கிராமங்களின் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.

அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளையும் அனைத்து ஊராட்சிகளிலும் மேம்படுத்துவது எனது தலையாய கடமையாகும். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022ன் கீழ் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-2022ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், சூரக்குடி கிராமத்தில் ரூ.14.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை மற்றும் சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என, மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற 5 திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இவ்வூராட்சியின் கூடுதல் தேவைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தற்போது ஊராட்சியின் சார்பில் கோரிக்கைகள் வரபெற்றுள்ளன. அப்பணிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இரா.சிவராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) எம்.முத்து மாரியப்பன்,

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன் தி.சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஆர்.கே.முருகப்பன் , முன்னாள் அமைச்சர் தென்னவன் கானாடுகாத்தான் பேரூராட்சித் தலைவர் ராதிகா காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!