சிவகங்கை மாவட்ட வேளாண் விரிவாக்க மையத்தில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்ட வேளாண் விரிவாக்க மையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

திருப்புவனம் வேளாண்மை விரிவாக்க மையத்தில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்புவனம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில், வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்,

சிவகங்கை மாவட்டத்தில், 2023-2024-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு நெல் பயிர்களில் மேற்கண்ட ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில், டிகேஎம்-13 - 53.40 மெ.டன், ஆர்என்ஆர் - 21.55 மெ.டன், ஜேஜிஎல் - 84.89 மெ.டன், கோ-51 - 21.18 மெ.டன், கோ-50 - 6 மெ.டன், என்எல்ஆர் - 150.04 மெ.டன், வீஜீடி-1 - 8.75 மெ.டன், பிபிடி- 19.40 மெ.டன், ஏடிடி 39 - 11.33 மெ.டன் மொத்தம் 356.53 மெ.டன் நெல் விதைகள் என மொத்தம் 12 வட்டாரங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயறு வகைகளில் உளுந்து விபிஎன்-8, 10, 11 ஆகிய ரகங்கள் விரிவாக்க மையங்களில் 4,161 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 4,560 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையில் உள்ளது.

சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு கோ-15 ரகம் 824 கிலோ, குதிரைவாலி எம்டியு-1 ரகம் 595 கிலோ கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட தயார் நிலையில் உள்ளது.

மேலும், 3,083 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையில் உள்ளது. எண்ணெய் வித்து பயிர்களில் தரணி, கதிரி லப்பாட்சி ஆகிய ரகங்கள் தற்போது 8,765 கிலோ கொள்முதல் செய்து சுத்தம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட தயார் நிலையில் உள்ளது. எள் பயிரில் டிஎம்வி-3 ரகம் 2,127 கிலோ தற்போது, கொள்முதல் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட உள்ளது.

எனவே, விவசாயிகள் தற்போது பெய்து வரும் கோடை மழையினை பயன்படுத்தி, கோடை உழவு செய்திடுவதற்கு ஏதுவாக, அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல், உளுந்து, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் விதைகளை தேவைக்கேற்ப வாங்கி பயன்பெறலாம்.

இவை தொடர்பாக, திருப்புவனம் வட்டாரத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள், விதைகள் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரங்கள் ஆகியன குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளுக்கு தேவையானவைகளை வழங்கிடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story