சிங்கம்புணரி சமத்துவபுரத்திற்கு விடிவு! -அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!!

சிங்கம்புணரி சமத்துவபுரத்திற்கு விடிவு! -அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!!
X
அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்த சிங்கம்புணரி சமத்துவபுரத்திற்கு விடிவு! சீரமைத்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நெடுநாளாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த 100 சமத்துவபுர வீடுகள் வெகு விரைவில் புதுபிக்கபட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அறிவிப்பு.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம். கண்ணமங்கலபட்டி ஊராட்சியை சேர்ந்த வேங்கைபட்டி கிராமத்தில் 2010- 2011 ஆண்டில் கலைஞரின் ஆட்சியில் பெரியார் சமத்துவபுர வீடுகள் திட்டத்தின் கீழ் 100 வீடுகள், தார்ச்சாலை, . தண்ணீர் வசதி, மேல்நிலைத்தொட்டி, நியாயவிலைக்கடை, ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.

சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட 100 சமத்துவபுர வீடுகளை 10 ஆண்டாக அதிமுக ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நிறைவாக கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயனற்ற நிலையில் உள்ள இந்த வீடுகளை சரி செய்யப்பட்டு வெகு விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். இந்நிகழ்வின் போது ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!