திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திமுக சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக ஆளுநர் உத்தரவின்பேரில் சிவகங்கை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் வரும் 9 ஆம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி திருப்பத்தூரை அடுத்துள்ள வைரவன்பட்டியில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக கூறி அதிமுகவினர் சார்பில் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவதூறு பேச்சு குறித்து அறிந்த தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததின்பேரில் சிவகங்கை நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமநாதன் கடந்த 3 ஆம் தேதி பதிவு செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி சாய்பிரியா வருகிற 9 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!