டாக்டர் பட்டத்தை நெகிழ்ச்சியுடன் பெற்ற நடிகர் சிம்பு: உருக்கமான பேச்சு
பெற்றோருடன் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள, அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, நடிகர் சிலம்பரசன் ஆகியோருக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதில், நடிகர் சிலம்பரசன் தனது தந்தை நடிகர் டி.ராஜேந்தர், தாய் உஷா ராஜேந்தர் ஆகியோர் பங்கேற்று, இந்நிகழ்வில் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார். மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர் காணப்பட்டார்.
பட்டம் பெற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு, வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு எனது நன்றி. இந்த விருது எனக்கு கிடைத்ததாக கருதவில்லை. காரணம், விருதைப் பெற, என் தாய் - தந்தையே காரணம். திரைத்துறையில் நடிப்பு , இயக்கம் ,நடனம் என அனைத்தையும், 9 மாத குழந்தையாக இருந்தது முதல், எனக்கு கற்றுத் தந்தது எனது தாய் தந்தைதான். இப்படிப்பட்ட அப்பா அம்மா அடுத்த ஜென்மத்தில் எனக்கு கிடைப்பார்களா என தெரியவில்லை என்றார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு பேசுகையில், விளையாட்டு வீரராக எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதினை எனக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu