இந்தியாவில் அதிக நன்கொடை அளிப்பவர்கள்: சிவநாடார் புதிய சாதனை
ஷிவ் நாடார்
இந்தியப் பணக்காரர்களில் அதிகம் சம்பாதிப்பவர், விலையுயர்ந்த கார் வைத்திருப்பவர், அரண்மனைப் போன்ற வீடு வைத்திருப்பவர்களை நமக்குத் தெரியும். ஆனால் அதிகமாக நன்கொடை அளித்தவரை நமக்குத் தெரியுமா..?
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் 'ஷிவ் நாடார்', ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான' இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்' (HCL)-இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் 'ஷிவ் நாடார் அறக்கட்டளையின்' தலைவரும் ஆவார். சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர்
தமிழகத்தின் திருச்செந்தூரைச் சேர்ந்த சிவ நாடார் தான் இந்தியாவிலேயே அதிக நன்கொடை அளித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 1161 கோடி ரூபாய் தானம் செய்து இந்தியாவில் தானம் செய்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி முதலிடத்தில் இருந்தார். இந்த ஆண்டு அவர் 484 கோடி தானம் செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
சிவ நாடார் ஒரு நாளுக்கு சராசரியாக 3 கோடி ரூபாய் தானம் செய்கிறார். இந்தியாவின் மாபெரும் பணக்கார்களான அதானி, அம்பானியை விட இது பல மடங்கு அதிகம்.
இந்த பட்டியலில் உள்ள பெண்களில் ரோகினி நிலேகனி முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஒரு ஆண்டுக்கு 120 கோடி நன்கொடை செய்துள்ளார். ரிலையன்ஸ் உரிமையாளர் அம்பானி 411 கோடி நன்கொடையுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் முதல் பணக்காரரான அதானி 190 கோடி நன்கொடை செய்து 7வது இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலின் படி, பணக்காரர்கள் அதிகமாக கல்விக்கும் அதைத் தொடர்ந்து மருத்துவத்துக்கும் அதிக நன்கொடைகளை வழங்குகின்றனர்.
சிவநாடார் பல முறை அதிக நன்கொடையாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
சிவ நாடார் கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பையும் கோயம்புத்தூரில் கல்லூரியையும் முடித்தார். புனேவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது மைக்ரோகார்ப் என்ற பெயரில் கால்குலேட்டர் விற்பனை நிறுவனமாக நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டார்.
1976ம் ஆண்டு ஹெச்.சி.எல்., நிறுவனத்தை தொடங்கினார். 1.87 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது 2.9 லட்சம் கோடி சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கிறார்.
சிவநாடார் அவரது தந்தை சுப்பிரமணியம் நினைவாக எஸ்.எஸ்.என் கல்லூரியை நிறுவினார். சிவ நாடார் அறக்கட்டளை பலதரப்பில் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.
பிசினஸ் எக்ஸலன்ஸ் விருது, பத்ம பூஷன் விருது, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆசிய அளவில் மனிதநேயம் மிக்கவர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது 77 வயதாகும் இவருக்கு ரோஷினி என்ற மகள் உள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனம் தற்போது ரோஷினியால் வழிநடத்தப்படுகிறது.
சிவநாடார் பல்கலைகழகம், சிவ நாடார் பள்ளி, ஷிக்சா இனிசியேடிவ், கிரண் நாடார் மியூசியம் ஆகியவற்றை சிவ நாடார் மற்றும் குடும்பத்தினர் நடத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu