தேர்தலுக்கும் தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை: சுகாதார செயலாளர்

தேர்தலுக்கும்  தொற்று பரவலுக்கும் சம்மந்தம் இல்லை:  சுகாதார செயலாளர்
X

ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் 

சமூக வலைதளத்தில் தவறான செய்திகளை பகிராமல் சரியான செய்திகளை பகிருங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா புற நோயாளி பிரிவில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையில் அதிக ஆக்சிஜன் தேவை இருந்தது போன்ற நிலை தற்போது இல்லை. தேவையான அளவு ஆக்சிஜன் தற்போது இருக்கிறது. 2000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் 121 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 65 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 16 பேர் முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள். 40 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என தெரிவித்தார்.

நோய் தொற்று பொறுத்தவரை டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து வருகிறது என்றும் கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளது என்று கூறினார்

நோய் தொற்று பொறுத்தவரை 5% பேர் தான் மருத்துவமனை வருகிறார்கள். 95% பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் 80% ஒமிக்ரான் பாதிப்பு இருந்தாலும், மீதம் உள்ளது டெல்டா பாதிப்பு ஆகும்.

பொது இடங்களில் தளர்வுகள் அளித்த பின்னர் பொதுமக்கள் கூட்டமாக செல்லாதீர்கள் என்று கூறிய அவர், தேர்தலுக்கு நோய் பரவலுக்கும் சம்மந்தம் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் தான் நோய் தொற்று அதிகரிக்கும். எனவே சமூக வலை தளங்களில் கவனமாக செய்திகளை பகிருங்கள் தவறான செய்திகளை பகிராதீர்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் டெல்டா இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. நோய் பரவல் பற்றி மத்திய, மாநில அரசுகள் , உலக சுகாதார நிறுவனம் தெளிவான கருத்துக்களை பதிடுவிடுன்றனர். தமிழகத்தில் காய்ச்சல் தொற்று குறைந்து வருகிறது, இந்த நிலையிலும் Online மாணவர்கள் படித்தால் பாதிக்கப்படுவார்கள், அவர்களது படிப்பு பாதிக்கப்படும் என்று குழந்தைகள் மன நல வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை ஏதாவது ஒரு பள்ளியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது என உலக சுகாதார மையத்தில் பல நாடுகள் அறிவுறுத்திய நிலையில் தான் வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை மாவட்ட கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil