திமுக ஆட்சி மாறியதும் முதல் கைது செந்தில் பாலாஜியாகத்தான் இருக்கும் : பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி
கோவை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை.
Senthil Balaji will be the first arrest-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது தப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரத்தில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தங்கம் கடத்தலில் தொடர்புள்ளது என்கிற புகாருக்கு அவர் வாய் திறக்கவில்லை.
சமூகவலைதளங்களில் முதல்வர் குறித்து கருத்து பதிவிட்டதற்காக தமிழக அரசு இதுவரை பாஜக தொண்டர்கள் 21 பேரை கைது செய்திருக்கிறது. காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கர்நாடக அரசு கேட்கிறது என்பதற்காக, மேகதாது அணை கட்ட அனுமதி கொடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அங்கீகாரம் இல்லை. திமுக அரசின் ஊழலுக்கு உரிய ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். கவர்னரிடமும் புகார் தெரிவித்துள்ளோம்.
Senthil Balaji will be the first arrest-அரசு தங்கள் கையில் இருக்கின்ற இன்னும் மூன்றாண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், தமிழக மின்துறை அமைச்சர் தப்பிக்கவே முடியாது. அரசு மாறும்போது முதல் கைது செந்தில் பாலாஜி தான்.
அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக என்றுமே தலையிட்டது கிடையாது. இனிமேலும் தலையிடப் போவதும் கிடையாது. அந்த கட்சியின் தொண்டர்கள் ஜனநாயக முடிவுப்படி அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம்.
பாஜக சித்தாந்தம், கொள்கையை தான் நாங்கள் முன்னிலைப்படுத்துவோம். எளிய தொண்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். தனி மனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்த மாட்டோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu