கட்டிட அனுமதி பெற இனி அலையவேண்டாம்..!

கட்டிட அனுமதி பெற இனி அலையவேண்டாம்..!
X

தலைமை செயலகம் (கோப்பு படம்)

வீடு கட்டணுமா? இனி உங்களுக்கு கவலை இல்லை. ஆமாங்க. கட்டிட அனுமதி பெற இ.சேவை மையம் போனால் போதும். விரைவில் வரப்போகுதுங்க.

Self Certification Building Permit, Self Certification, E.Center, Tamil Nadu Government

தமிழக அரசு வீடு கட்டுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல எளிதான செயல்முறைகளை மக்களுக்கு செய்துகொடுக்க முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் இ - சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் சமர்ப்பித்து கட்டிட அனுமதி பெறுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலவிடத் தேவையில்லை. இ சேவை மையங்களில் இருந்து எளிதாக விண்ணப்பம் செய்து வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றிதழ் பெறமுடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளதாக அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Self Certification Building Permit,

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாக அலைச்சல் இல்லாமல் கிடைக்கவேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக பத்திரப் பதிவு, வீடு கட்டுவதற்கான அனுமதிச் சான்றிதழ் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் லஞ்சம் போன்ற மக்களுக்கு எதிரான ஊழல் இருக்கவே கூடாது என்பதை உறுதி செய்வற்காக பல்வேறு புதிய நடைமுறைகளை அரசு செய்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சிப்பெற்ற தற்காலத்தில் ஆன்லைன் சேவை என்பது பரவலாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வீடு கட்டுவோர் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக 'சுய சான்றிதழ்' கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்த மாதத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் அடிப்படையில் 2,500 சதுரடி முதல் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான வீட்டு மனையில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியை பெறுவதற்கு வீடு கட்டுவோர் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். அவர்களே நேரிடையாக

https://onlineppa.tn.gov.in/SWP-web/ login என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

Self Certification Building Permit,

பத்திரப்பதிவு தொடங்கி வீடு கட்டுவதற்கு பெறவேண்டிய பல அனுமதிகளுக்காக பல துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடியது. சாதாரண மக்கள் பல துயரங்களை அனுபவித்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த துயரங்களை துடைக்கும்விதமாக தமிழக அரசு இந்த அருமையான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இ சேவை மையங்கள் மூலமாக கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்யும்போது தவறுகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் பொதுமக்களுக்கு தேவையில்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!