சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை
X
கனமழை காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் சென்றுள்ள பொதுமக்கள், இரண்டு நாட்களுக்கு சென்னை வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மழை பாதிப்பு நிவாரணப்பணிகளை, மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது என்று, மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!