எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்புடைய கொள்ளையனை தனிப்படை போலீசார் சற்று முன் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்புடைய கொள்ளையனை  தனிப்படை போலீசார் சற்று முன் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்
X

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்புடைய வீரேந்தர். 

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்து சற்று முன் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்புடைய வீரேந்தர் தனிப்படை போலீசார் கைது செய்து சற்று முன் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருந்தனர். இந்த கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையனான அமீர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு ராயலா நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்து சற்று முன் சென்னை விமா ன நிலையம் அழைத்து வரப் பட்டான். இங்கிருந்து ராயலா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டு மேலும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது

Tags

Next Story
ai healthcare products