ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா மீண்டும் வருகை
ஜெ சமாதியில் சத்தியம் செய்யும் சசிகலா
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துகள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிக்கு நாளை மறுதினம் சென்று சசிகலா நடராஜன் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக ஆட்களை திரட்டும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின் கடந்த ஜனவரி மாதம் சசிகலா சிறையிலிருந்து விடுதலையானார். இதையடுத்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே அதிமுக நிர்வாகிகளை செல்போனில்தொடர்பு கொண்டு பேசி வந்தார். தொண்டர்களின் விருப்பப்படி மீண்டும் அதிமுக தலைமை ஏற்பேன்.. அனைவரையும் அரவணைத்து செல்வேன் என ஆடியோக்கள் வெளியிட்டு வந்தார். சசிகலாவிடம் பேசிய, அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமை நீக்கி வந்தது.
இந்நிலையில் 17ம் தேதி திநகர் எம்ஜிஆர் நினைவிடம், ராமாபுரத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கொடியை ஏற்றுகிறார். இதற்காக கூட்டத்தை திரட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அதிமுகவில் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தென் சென்னை மாவட்ட அதிமுக முன்னாள் இணை செயலாளர் வைத்தியநாதன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் சசிகலாவை வரவேற்கும் விதமாக அவரது ஆதரவாளர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் சுவொரொட்டிகளை ஒட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu