அதிமுகவில் மீண்டும் சசிகலா.. அவரசர கூட்டத்திற்கு ஏற்பாடு! ஓபிஎஸ் அதிரடி
பைல் படம்.
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று திடீரென அ.தி.மு.க., தேனி மாவட்ட செயலாளர் சையதுகானை அழைத்த ஓ.பி.எஸ்., கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
அந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்கும் தீர்மானத்தை வழிமொழிய உத்தரவிட்டார். இதன்படி நேற்று இரவு கூடிய தேனி மாவட்ட அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவையும், தினகரனையும் அ.தி.மு.க.,வில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓ.பி.எஸ்.க்கு மிகவும் நெருக்கமான தேனி நகராட்சி முன்னாள் தலைவர் முருகேசன் பேசுயைில், அண்ணே நாம் மட்டும் தீர்மானம் போட்டால் போதாது. தேனி மாவட்டத்தில் கடைநிலை கட்சி ஊழியர் முதல் முதல்நிலை நிர்வாகி வரை அத்தனை பேரும் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட வேண்டும் என்றார்.
அதற்கு உடனே ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்., உடனே மண்டபத்தை புக் செய்யுங்கள் என்றார். தற்போது இரண்டு மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் நாளை மறுநாள் கூட்டம் நடத்துவது எந்த மண்டபம் என்பது இன்னும் சில மணி நேரத்தில் முடிவாகி விடும். இதற்குள் முன்னாள் அமைச்சர்கள் உதயக்குமார், செல்லுார் ராஜூ, மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், துாத்துக்குடி, நெல்லை உட்பட தென் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் வந்து ஓ.பி.எஸ்.,ஐ., சந்தித்து அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவி்த்து வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கொங்குமண்டல தலைவர்கள் பலர் ஓ.பி.எஸ்., கருத்துக்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் கூட்டம் நடத்தி ஆலோசித்து வருகின்றனர். ஆகவே அ.தி.மு.க,வில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைய போவது உறுதியாகி விட்டது. எடப்பாடி உட்பட எதிர்க்கும் சிலரை மீண்டும் கட்சியில் இருந்து நீக்கவும் ஓ.பி.எஸ்., தரப்பு தயாராகி வருகிறது. இன்னும் சில தினங்கள் பரபரப்பான நிலை நிலவும் என தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu