/* */

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: விசாரணை நவ.10க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: விசாரணை நவ.10க்கு ஒத்திவைப்பு
X

சரோஜா

இராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் குணசீலன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர். இவர், முன்னாள் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின், அண்ணன் மருமகன். இவர் கடந்த செப்.30ம் தேதி , இராசிபுரம் போலீசில், பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் மனு அளித்தார்.

புகாரில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித்தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ. 76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரி போலீசார், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், முன் ஜாமீன் கேட்டு, கடந்த 29ம் தேதி முன்னாள் அமைச்சர் சரோஜா நாமக்கல் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை, வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 1 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு