ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பூச்சி என்கிற அரபுலி.

ஏற்காட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை மற்றும் சாராய ஊறல் போட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி ஏற்காடு காவல்நிலைய போலீசார் மலைக்கிராமங்களில் அவ்வபோது அதிரடி சோதனை மேற்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு அரசு அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரையும், சாராய ஊறல் போட்ட வழக்கில் குண்டூர் கிராமத்தை சேர்ந்த பூச்சி என்கிற அரபுலி என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!