சேலம் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா திறக்கப்படாதால் பார்வையாளர்கள் ஏமாற்றம்

சேலம் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா திறக்கப்படாதால் பார்வையாளர்கள் ஏமாற்றம்
X

பூட்டப்படுள்ள சேலம் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படாதால் பூங்காவை காணவந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் கடந்த நான்கரை மாதங்களாக வன உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ,வன உயிரியல் பூங்காக்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்காவை காண சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். ஆனால் அரசு அறிவிப்புக்குப் பின்னரும் குரும்பப்பட்டி வனஉயிரியல் திறக்கப்படாததால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், தற்பொழுது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்காவை காண மிகுந்த எதிர்பார்ப்போடு வந்ததாகவும் ஆனால் அரசு அறிவிப்பின்படி இன்று திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறும் பார்வையாளர்கள் வன உயிரியல் பூங்கா திறப்பு குறித்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture