சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை  பொருட்கள் பறிமுதல்
X
சேலம் வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5,71,000 மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியில் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரும் தனியார் குடோனில் குட்கா, பான்சாலா புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் விற்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான குட்கா பான்மசாலா, புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் குட்கா பான்மசாலா புகையிலையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!