/* */

சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது

சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது
X

வழிப்பறி கொள்ளையர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த போலீசார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா இவர் வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆசிரியர் சாந்தா கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு கொடியேற்ற செல்வதற்காக முத்தம்பட்டி இரயில்வே கேட் அருகில் பேருந்து நிறுத்தத்தில் காலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 28 வயது மிக்கதக்க இரண்டு வாலிபர்கள் ஆசிரியர் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு வழிப்பறி கொள்ளையர்கள் தப்பியோடினர்.

மேலும் ஏத்தாப்பூர், பெரிய கிருஷ்ணாபுரம், ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த மோகன்குமார் மனைவி மோகனா தம்பதியிடம் இருந்து தங்க செயினையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இந்த தொடர் வழிப்பறி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் டிஎஸ்பி, முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்தின் பேரில் வந்த வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் இந்தியில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புஸ்பேத்திரபிங்கி (22),சதாம்ராஜா (23) என்பதும் வாழப்பாடி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்த இருசக்கர வாகனம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருடி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?