ஏற்காட்டில் மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது: 41 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஏற்காட்டில் மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது: 41 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவர்.

ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள அரங்கம் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனையிட்டதில் 41 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இருவரும் பெல்லாக்காடு பகுதியைச் சேர்ந்த தனபால் மற்றும் தர்மலிங்கம் என்பதும், இவர்கள் இருசக்கர வாகனம் மூலம் அரசு மதுபாட்டில்களை மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 41 மது பாட்டில்களோடு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!