வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல தடை

வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள்  ஏற்காட்டிற்கு செல்ல தடை
X

ஏற்காடு மலைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார். (பைல் படம்)

ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். பிற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் அல்லதுஆர்டிபிசிஆர் சோதனை செய்து கோவிட் நெகட்டிவ் என சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர் மக்கள் போக்குவரத்தின் போது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணங்களை காட்டி பயணிக்கலாம் என்றும் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மக்கள் அதிக அளவில் கூடும் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கும் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business