தடையை மீறி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்: போலீசார் நடவடிக்கை

தடையை மீறி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்: போலீசார் நடவடிக்கை
X

தடையை மீறி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகளை அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தடையை மீறி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகளை அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் நீடிக்கிறது. இதனிடையே சுற்றுலாதளமான ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதனால் மீண்டும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி ஏற்காட்டிற்கு இன்றைய தினம் படையெடுத்து வந்த சுற்றுலா பயணிகளை அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் ஏற்காட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story