ஆசையாக ஏற்காடு கிளம்பிய பயணிகள்... தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்

ஆசையாக ஏற்காடு கிளம்பிய பயணிகள்...  தடுத்து திருப்பி அனுப்பிய போலீசார்
X
ஏற்காடு சென்ற சுற்றுலாப் பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி, கோடை வாசஸ்தலமான ஏற்காடு, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளையே நம்பியுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கும் விடுதிகள், வாடகை ஓட்டுனர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவரங்களை அறியாமல் ஏற்காட்டிற்கு படை எடுக்கும் சுற்றுலாப் பயணிகளை, அடிவாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆர்வமுடன் ஏற்காடு செல்ல வந்திருந்த சுற்றுலா பயணிகள் , மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!