தற்காலிக பணியாளர் தேர்தல் விருப்பமனு : கலெக்டர் சஸ்பெண்ட் ஆர்டர்
வேளாண்மை துறையில் தற்காலிகமாக பணியாற்றிய பெண் ஒருவர் ஏற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையில் உதவி தொழில்நுட்ப மேலாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்தவர் திலகவதி. இவர் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து மீடியாக்களில் செய்தி பரவியதை அடுத்து அவருக்கு முறையாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 பிரிவு 14(4) ல் அரசு ஊழியர்கள் இதுபோன்று தேர்தலில் போட்டியிடுவது கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை துறையில் உதவி தொழில்நுட்ப மேலாளராக தற்காலிகமாக பணியாற்றி வந்த அவர் அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரை பணி நீக்கம் செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu